பண்டாரவளை – கொஸ்லாந்தை மேல் தியலும பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் இளம் காதலர்கள் மீது யானையொன்று தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று (12) இடம்பெற்றுள்ளது.
காதல் ஜோடியான இருவரும் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இதேவேளை காட்டு யானையின் மூலம் படுகாயமடைந்த இளைஞரை கொஸ்லாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை எதிர்நோக்கிய இருவரும் குருநாகல் வாரியபொல மற்றும் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.