இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க டொலரின் மதிப்பு 500 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க எச்சரித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது குறித்து கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு புதிய வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது என காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.