மருதானை ரயில் நிலையத்தில் இன்று(25) காலை எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய ரயில் தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன.
மேலும் மருதானை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் ரயில் தடம் புரண்டுள்ளதன் காரணமாக ரயில் நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.