தவிர்க்க முடியாத வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.
சிறு போகம் தற்போது பாதியளவு நிறைவடைந்து விட்டது. போதுமான அளவு இரசாயன உரம் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்த முறை 315,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறுகிறது. வழமையாக சுமார் 4 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறும்.
சிறுபோகத்திற்காக 80 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் அவசியமாகின்றது. எனினும் தற்போது நாட்டில் இரசாயன உரத்திற்கான தட்டுப்பாடு நிலவுவதோடு அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் இந்த முறை சிறுபோக விளைச்சல் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.