எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக இவ்வாறான விலை அதிகரிப்பு ஏற்படும் என அந்த சங்கம் கூறியுள்ளது.
இந்த நிலையில், குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இறக்குமதியாளர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கட்டண அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையுவுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்க முடியாதுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான துரித அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் வஜிர அபேவர்தன இதன்போது உறுதியளித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.