மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் நேற்று முன்தினம் (25) இரவு மனைவியுடன் தகராறு செய்ததாக தெரியவந்துள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.