இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி வெளியேறினார். இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.
இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இப்பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகம்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.
அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாம் அப்பதவிக்காக போட்டியிடப் போவதில்லை என்றுகூறி டலஸ் அழகப்பெரும பெயரை முன்மொழிந்துள்ளார்.
63 வயதாகும் டலஸ் அழகம்பெரும, 2005 முதல் அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மற்றொரு வேட்பாளரான 53 வயதாகும் அனுரகுமார திசாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இதுபோன்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது 1978-க்குப் பிறகு இதுவரை நடந்திராத ஒன்று. 1982, 88, 94, 99 மற்றும் 2005, 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் மக்கள் வாக்களித்தே இலங்கை ஜனாதிபதி தேர்வு நடந்திருக்கிறது.
1993-ல் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டபோது காலியான பதவிக்கு DB Wijetunga நாடாளுமன்றத்தால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய பதவிக் காலமான 2024 நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.