பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு பிணை கோரிக்கை விடுத்து, அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்பிப்பதற்காக குறித்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வருட சிறைத்தண்டனை
போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சஷி வீரவன்சவை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அதற்கமைய, சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த தீர்பை எதிர்த்து அவரின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.