10 அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் இன்று முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு 325 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் புதிய விலை 1,225 ரூபாயாகும்
அத்தோடு, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 60 ரூபாயினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டு 299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாயாகவும், நெத்தலி கிலோகிராம் ஒன்றின் விலை 1,140 ரூபாயாகவும், ஒரு கில கிராம் கோதுமை மாவின் விலை 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், சோயா மீட் கிலோ ஒன்றின் விலை 650 ரூபாயாகவும், சிவப்பு அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 139 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் கடலையின் விலை 540 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.