எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, தேவையில்லாமல் எரிபொருள் நிலையத்தில் குவிவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டீசல் தாங்கிய கப்பலொன்று நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததுடன், இந்திய கடன் வசதியின் கீழ் மேலும் 3 கப்பல்கள் அடுத்த 2 வாரங்களுக்குள் நாட்டை வந்தடைய உள்ளன.
அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட உள்ளதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.