எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய போவதில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைப்பதை விட, முறையான ஒழுங்குமுறை மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.