புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. அரச தலைவர் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுபெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் தலைமையில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் போது பிரதமர் தவிர்ந்து முழு அமைச்சரவையும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இன்று புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.