அண்மையில் சட்டவிரோதமான முறையில் 50,000 யூரோ மற்றும் 40,000 அமெரிக்கடொலர் வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தைக் கைகளில் வைத்திருப்போர் மற்றும் முறையற்ற வழிகளில் வெளிநாட்டு நாணயப்பரிமாற்றல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் தொடரும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
அதேவேளை வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின் பிரகாரம் ஒருவர் கைகளில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச வெளிநாட்டு நாணய அளவான 15,000 டொலர்களை 10,000 டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தொகையை 3 மாதகாலத்திற்குமேல் கைகளில் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை மேற்குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான வெளிநாட்டு நாணயத்தைக் கைகளில் வைத்திருப்பவர்களுக்கு இருவார கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் தமக்கு அந்தப் பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி இருவாரங்களுக்குள் அவ்வெளிநாட்டு நாணயத்தை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். இல்லாவிட்டால் அதனை ரூபாயாக மாற்றவேண்டும்.
இதற்கு மாறாகச் செயற்படுவோருக்கு வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின் பிரகாரம் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன், அது அவர்கள் கைகளில் வைத்திருக்கும் தொகையை விடக்கூடிய தொகையாக அமையலாம்.
எனவே வெளிநாட்டு நாணயத்தைக் கைகளில் வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கியில் வைப்புச்செய்வதன் மூலம் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருப்போரின் தேவையைப் பூர்த்திசெய்வதற்குப் பங்களிப்புச்செய்யுமாறு கேட்டுக்கொள்ளவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.