அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 16 பேர் நாளை (05) பாராளுமன்றத்தில் சுயேட்சைக் குழுவாக தனித்தனியாக அமர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அரசாங்கத்தில் இருந்து விலகி தனியே அமரவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர்கள் இன்னும் ஆளும் கட்சியிலேயே உள்ளனர்.
இந்த நிலையில், விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து சுயேச்சையாக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை (05) பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (R)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.