Monday, May 13, 2024
Homeதேசியசெய்திகள்முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

HTML tutorial

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வாறு பதிவு செய்வதற்கு 3000 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றும், முச்சக்கரவண்டி பதிவுக்கு 3000 ரூபாவும், வருடாந்த பயணிகள் போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரத்திற்கு 1000 ரூபாவும், சாரதி பதிவுக்கு 1500 ரூபாவும் அறவிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 8 பிராந்திய அலுவலகங்களில் முச்சக்கரவண்டி பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்