ரயிகளுக்கு எதிர்வரும் 3 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் ரயில் சேவைகளும் தடைப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்களை இயக்குவதற்காக மூன்று நாட்களுக்கு மாத்திரம் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. இதன்காரணமாக சில மட்டுப்படுத்தல்களுடன் ரயில் சேவைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உரிய வகையில் எரிபொருள் பெற்றுத் தரப்படும் என கனியவள கூட்டுதாபனமும் அறிவித்துள்ளது.
எனினும் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் குறித்த பிரச்சினை ஏற்படும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.