9 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) பதவியேற்றுள்ளனர்.
இந்நிகழ்வு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, நிமல் சிறிபால டி சில்வா துறைமுகம், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராகவும் சுசில் பிரேம ஜயந்த கல்வி அமைச்சராகவும் பதவியேற்றனர்.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் விஜேதாஸ ராஜபக்ஷ நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றனர்.
ரமேஷ் பத்திரன பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும் ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் பதவியேற்றனர்.
மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நளின் ருவன் ஜீவ பெர்னாண்டோ வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும் டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.