மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர்.
வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரச வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை பொதுமக்கள் நாட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.