நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், ரயல மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எழுத்துமூலம் அனுமதியின்றி, ஊரடங்கும் காலப்பகுதியில் மேற்படி இடங்களில் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.