சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, போதுமானளவு அரிசியை இறக்குமதிசெய்ய நேற்று (02) மாலை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலையாக 135 ரூபாய் முதல் 140 ரூபாய்வரையும், 150 ரூபாய் சில்லறை விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 976 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
இந்நிலையில், இந்த சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கான அமெரிக்க டொலர்களை வழங்க நிதியமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.