அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக மேலும் 900,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான தகுதியான பயனாளிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பட்டியல் நலன்புரி நலன்புரி சபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.wbb.gov.lk-லும் வெளியிடப்பட்டுள்ளது.