டொலரின் பெறுமதி குறைவினால் விமானப் பயணச்சீட்டுகளின் விலை சுமார் 20% குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதனை மேலும் குறைப்பதாக விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்களில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் இதன் விளைவாக சுமார் ஏழு புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.