- Advertisement -
சுமார் 580 ஆண்டுகளின் பின்னர் இன்று விசேட சந்திரகிரகணம் இடம்பெறும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கிழக்கு பகுதி, அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பிராந்திய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எவ்வாறெனினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் பார்வையிட முடியாது. இந்த சந்திர கிரகணம் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கும்.
இலங்கை நேரப்படி முற்பகல் 11.32 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகும். இதேவேளை, இந்த நாட்களில் ஞாயிற்றுக் குடும்பத்தின் பிரகாசமான கிரகங்களான வியாழன், சனி மற்றும் வெள்ளி கிரகங்களை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வெறும் கண்களினால் தெளிவாக பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.