2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் 2022க்கான உலகின் மிகச் சிறந்த கடவுச்சீட்டுகள் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நாடுகளின் கடவுச்சீட்டுகள் உள்ளவர்கள் 192 நாடுகளுக்கு விசா அனுமதி பெறாமல் செல்ல முடியும்.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு முதல் உலகில் பயணத்திற்கு ஏற்ற கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகள் கண்காணிக்கிறது.
2022 இல் வைத்திருப்பதற்கான சிறந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகள் பின்வருமாறு:
1. ஜப்பான், சிங்கப்பூர் (192 இடங்கள்)
2. ஜெர்மனி, தென் கொரியா (190)
3. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் (189)
4. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் (188)
5. அயர்லாந்து, போர்ச்சுகல் (187)
6. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா (186)
7. ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ், மால்டா (185)
8. போலந்து, ஹங்கேரி (183)
9. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (182)
10. எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவேனியா (181)
2022 இல் வைத்திருக்கும் மிகக் குறைந்த தரவரிசை கடவுச்சீட்டுக்கள் பின்வருமாறு..
102. இலங்கை, லெபனான், சூடான் (41 இடங்கள்)
103. பங்களாதேஷ், கொசோவோ, லிபியா (40)
104. வட கொரியா (39)
105. நேபாளம் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் (37)
106. சோமாலியா (34)
107. ஏமன் (33)
108. பாகிஸ்தான் (31)
109. சிரியா (29)
110. ஈராக் (28)
111. ஆப்கானிஸ்தான் (26)
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.