வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (6) உத்தரவிட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மனுதாரருக்கு 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மற்றைய அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதிவாதி விடுவிக்கப்பட்டதோடு, ஏனைய பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.