இன்று பாடசாலை விடுமுறை என்றாலும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைக்குரிய பணிக்குழாமினர் முன்னர் போலவே கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் கூறியுள்ளது.
இதேவேளை, அனைத்து அரச பாடசாலைகளுக்கும், நேற்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின், இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், முதலாம் தவணை விடுமுறை நேற்று முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு பின்னர் அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.