- Advertisement -
முன்பள்ளிகளை இம்மாத இறுதிக்குள் திறப்பதே எமது இலக்கு எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து படிப்படியாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
அதனடிப்படையில் கட்டம் கட்டமாகப் பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன் ஒரு அங்கமாக முன் பள்ளிகளைத் திறக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.