- Advertisement -
பகமுன பொலிஸ் நிலையத்துக்கு வந்த நபர் ஒருவரின் பணப்பையை குரங்கு ஒன்று திருடியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தான் கொண்டு வந்த பையை பொலிஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைத்த தனது மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பியதும், பணப்பையை எடுத்துக்கொண்டு ஒரு குரங்கு, மரத்தின் மீது ஏறுவதை அவர் கண்டுள்ளார்.
2000 ரூபாய் பணம், ஓட்டுநர் உரிமம், தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகள் அவரது பணப்பையில் இருந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், குரங்கிடம் இருந்து பணப்பையை பெற முடியாது போனதால், காணாமல் போன பொருட்கள், ஆவணங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
A monkey grabbed the purse of a man who had visited the Bakamuna Police Station today. The individual said that his ID card and other important items were in the purse.#SriLanka #SLNews pic.twitter.com/3YqqSjcP1b
— DailyMirror (@Dailymirror_SL) November 30, 2021
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.