முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(16) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில. லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் ஸ்ரீ லங்கா கமியூனிஸ்ட் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசூரிய வீரசிங்க உள்ளிட்ட தரப்பினர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.