- Advertisement -
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 20 பொருட்கள் அடங்கிய பொதியை, சதொச மூலம் 3,998 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனையகம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள், 1998 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொள்வதன்மூலம், இந்தப் பொதியைப் வீட்டுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என நேற்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வர்த்தக நிலையங்களில் 6,521 ரூபாய்க்கும் 5,834 ரூபாய்க்கும் 5,771 ரூபாய்க்கும் இந்தப் பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை செய்யப்படுகிறன.
ஆனால், தாங்கள் அதனை 3,998 ரூபாய்க்கு மக்களுக்கு வழங்குவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ஒவ்வொரு பொதியிலும் நுகர்வோருக்கு ஆகக்குறைந்தது 1,750 ரூபாய் இலாபம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.