கொழும்பில் 14 வயதான சிறுமியை விபசாரத்துக்கு விற்ற பெண் கைது

கழிவறைக்கு அழைத்து சென்று மாணவி ஆடைகளை களைய சொன்ன ஆசிரியர்

14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, விபசாரத்துக்காக விற்பனைச் செய்த, அச்சிறுமியின் உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த உறவுக்கார பெண், அச்சிறுமியை பலருக்கும் பணத்தை பெற்று விபசாரத்தக்கு விற்றுள்ளார்.

கிராண்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண், மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால், துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கிராண்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று இவ்வாறு விபசாரத்துக்கு விற்றுள்ளார்.

இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு அழைத்துவரும் சந்தேகநபரான அப்பெண், பல்வேறான வர்த்தகர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

12 வயதில் இருந்தே, அச்சிறுமியை இவ்வாறு இரண்டு வருடங்களாக, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரான அப்பெண்ணுக்கு 32 வயதாகும். இறுதியாக சிறுமியுடன் மீட்கப்பட்ட சந்தேநபருக்கு 38 வயதாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *