- Advertisement -
லிட்ரோ கேஸ் நிறுவனம் அன்றாட தேவைக்கு அதிகமாக எரிபொருள் விநியோகம் செய்து வருவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், உள்நாட்டு மற்றும் வர்த்தக சந்தை தேவைகளுக்கு ஏற்ற எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (10) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு நாட்களில் 220,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 90,000 முதல் 100,000 சிலிண்டர்களை வழங்க நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் தம்மிடம் உள்ள மேலதிக எரிவாயு சிலிண்டர்களுக்கும் புதிய எரிவாயு சிலிண்டர்களை பெற்று கொள்வதால் அதிக கேள்வி உருவாகியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, நுகர்வோர் தமது நாளாந்த தேவைகளுக்கு போதுமான அளவில் மாத்திரம் எரிவாயுவைவை பெற்றுக்கொள்ளுமாறு அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.