எரிபொருள் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் அரசாங்கத்திடம் கோரியுள்ளாா்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதால் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் போகுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளாா்.
எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் பெற்றோலிய கூட்டுத்தபானம் மாத்திரமன்றி கூட்டுத்தாபனத்தின் கடன் தொகை அரச வங்கி கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
நுண் பொருளியலுக்கான சகல காரணிகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு மிக விரைவில் தற்போது எடுக்கவேண்டிய சரியான நடவடிக்கை, எரிபொருள் விலையை அதிகரிப்பதாகும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளாா்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.