நாம் எவ்வளவு தான் நல்ல தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இருவேளை பற்களைத் துலக்கினாலும், பற்களின் இடுக்குகள் மற்றும் பின்புறத்தில் மஞ்சள் நிற கறைகள் சேர்வது மட்டும் தடுக்கமுடிவதில்லை.
அப்படி சேரும் மஞ்சள் கறைகளை நீக்கவும் முடியாத வண்ணம் இருப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் அதிகரிக்கிறது.
வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் அது ஈறுகளைப் பாதித்து, கிருமிகளை உண்டுபண்ணி வாயின் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.
எனவே இவற்றை எளியமுறையில் போக்குவது சிறந்தது. தற்போது பற்களின் மீது உள்ள கறைகள் போக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்களை இங்கே பார்ப்போம்.
இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
இரவு தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.