தமிழகத்தின் மாங்காடு சக்தி நகரை சேர்ந்த 17 வயது மாணவி, பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாங்காடு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த சில தினங்களாக நந்தினி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவர் எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அதில், Stop sexual Harassment… இதுக்கு மேலே முடியாது. மனசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. அந்த கனவு வந்து தொல்லை பண்ணுது” என எழுதப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.