சென்னையில் திருமண ஆசைகாட்டி 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காதல் மோசடி மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர்ஜிவாலை சந்தித்து மாடல் அழகிகள் 3 பேர் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- “எங்களோடு விளம்பர படங்களில் நடித்த மாடலிங் வாலிபர் ஒருவர் எங்களிடம் காதலிப்பதாக சொல்லி பழகி, பின்னர் திருமண ஆசைகாட்டி எங்களிடம் உடல் ரீதியாக உறவு வைத்து, பின்னர் லட்சக்கணக்கில் எங்களிடம் பணத்தையும் கறந்து விட்டு, கழற்றி விட்டு, விட்டார்.
எங்களிடம் உறவு வைத்தபோது, எங்களுக்கு தெரியாமல் ரகசியமாக எடுத்த படத்தை காட்டி, இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் பெற்றோருக்கு தெரிந்து விடும், என்று பயந்து விஷயத்தை வெளியில் சொல்லாமல் நாங்களும் மறைத்து விட்டோம்.
நாங்கள் 3 பேரும் தனியாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, எங்களை அந்த மாடல் வாலிபர் ஏமாற்றியதை தெரிந்து கொண்டோம். அந்த வாலிபரை பற்றி விசாரித்ததில் எங்களைப்போன்ற இன்னும் ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்களது கற்பை சூறையாடி இருப்பதும், தொடர்ந்து அவரது காம களியாட்டங்கள் நீடிப்பதும் தெரிய வந்தது.
பெண்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்தும் அந்த மனித மிருகத்தை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்க சபதம் போட்டு, நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
எங்களது பெற்றோருக்கு தெரியாமல் நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த பெண்கள் புகார் மனுவில் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காதல் என்ற புனிதமான சொல்லை, தனது காமலீலைகளுக்கு பயன்படுத்திய காதல் மோசடி மன்னனின் பெயர் முகமது செய்யது (வயது 26) என்று தெரிய வந்தது.
புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர். பி.காம். பட்டதாரியான இவர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அவர் மீது கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.