9 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் குளியலறையில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் தொடர்ந்து அந்த சிறுவனுடன் ரொமான்டிக் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிடுவது இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ், ஃபாலோயர்கள் பெறுவதற்காகவும், பதிவுகள் வைரலாகுவதற்காகவும் எல்லை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சமூக ஊடகங்களில் வைரலாவதற்கு மக்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளதாகவும், ஒரே இரவில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில், மக்கள் உறவுகள் மற்றும் கண்ணியத்தின் அனைத்து வரம்புகளையும் உடைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ஆரோகி பதக் என்பவர் (@pathakaarohiofficial) 9 வயது சிறுவனுடன் தொடர்ந்து ரொமான்டிக் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இவருக்கு 2 லட்சத்து 95 ஆயிரம் ஃபாலோயர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.
அந்த பெண்ணுக்கும் சிறுவனுக்குமான உறவு என்னவென்பது உறுதி செய்யப்படவில்லை. சமீபதில் ஆரோகி அளித்த பேட்டியில் தனக்கு 1 கோடி ஃபாலோயர்ஸ் வந்த பிறகு சிறுவன் யார் என்பதை சொல்வேன் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் குளியலறையில் காதல் பாடலுக்கு இருவரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் கடுமையாக கிளம்பியுள்ளன.
குளியலறையில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கும் நிறைய கமென்டுகள் வந்துள்ளன.