நேற்று காலை முதலே மும்பை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் புழுதிகாற்று சுழட்டி சுழட்டி அடித்துள்ளது. முக்கிய கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றுள்ளனர் வாகன ஓட்டிகள்.
சமீபகாலமாகவே டெல்லியில் காற்று மாசு படிந்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில், மற்றொரு புது தகவல் வெளிவந்துள்ளது.. பாகிஸ்தானில் புழுதிப்புயல் எதிரொலியால், மும்பையில் காற்று மாசு அதிகரித்துள்ளது..
பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதலே இந்த புழுதிப்புயல் வீச ஆரம்பித்துவிட்டது.. மும்பை உள்பட புறநகர் பகுதியில் அதிகமாகவே வீசியது.
இதனால் மும்பையில் காற்றின் தரம் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக மலாடு, மஜ்காவ் போன்ற இடங்களில் காற்றின் தரகுறியீடு 300-க்கு மேல் அதிகமாக தாண்டி சென்றுவிட்டது.
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தானே, நவிமும்பை, வசாய், பால்கர் போன்ற கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. எதிரே வண்டிகள் வருவது கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதி பறந்தது.. அதனால் வாகனங்களில் எல்லாரும் லைட்டை எரியவிட்டுதான் ஓட்டிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும், மேலும் சில இடங்களில் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. இதைபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, கராச்சியில் வீசிய புழுதிப்புயலின் தாக்கத்தையும், பாதிப்பையும் மும்பையில் உணரமுடிந்தது.
12 மணி நேரம் வரையில் புயலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, மும்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசக்கூடும்.” என்றார்..
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.