திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் இனாம் குளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் தேர்வு நடக்கும் போது ஆங்கில ஆசிரியர் முருகேசன் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மாணவி உடனடியாக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியில் திரண்டு ஆசிரியரை தேடினர். அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சக ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர் முருகேசனை பூட்டி வைத்து பாதுகாத்தனர்.
இந்த சம்பவம் அறிந்த இனாம்குளத்தூர் காவல் நிலைய காவலர்கள் அங்கு வந்து மாணவி மற்றும் மாணவி தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது ஆசிரியர் தவறாக ஈடுபட்டார் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சம்பவம் அறிந்து மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் மேலும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு செயலில் ஆசிரியர் ஈடுபட்ட நிலையில் 10 மாணவர்களை கண்டித்து பள்ளி நிர்வாகம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.