Thursday, April 18, 2024
Homeஇந்தியச்செய்திகள்சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்!

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்!

HTML tutorial

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்து வந்தது.

இதன் காரணமாக 22 ஆம் தேதி கல்லாறு, -ஆர்டர்லி ரயில் நிலையங்கள் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. அந்தப் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

ஆனால் ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருவதால் கடந்த 23 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மேட்டுப்பாளையம் – ஊட்டி மற்றும் ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை வருகிற 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்