16 வயது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (29) இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், 20 வயதான ஷாஹில் என்பவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 16 வயது சிறுமியான நிக்கியும், ஷாஹிலும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
அண்மைய நாட்களாக காதலியான சிறுமி ஷாஹிலுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். இது தொடர்பில் கடந்த 27ஆம் திகதி இது தொடர்பாக இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வாக்குவாதங்கள் நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஷாஹில் நேற்றைய தினம் (29) இரவு சிறுமியைப் படுகொலை செய்துள்ளார். சுமார் 22 முறை கத்தியால் குத்திய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த சிறுமி பிறந்தநாள் விழா ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து கொலைக் குற்றவாளியான இளைஞனை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.