Monday, May 27, 2024
Homeஇந்தியச்செய்திகள்மீண்டும் சரிந்த தங்கம், வெள்ளி விலை!

மீண்டும் சரிந்த தங்கம், வெள்ளி விலை!

HTML tutorial

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூபாய் 4603.00 என விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 16 குறைந்து ரூபாய் 36824.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4969.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39752.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் குறைந்து ரூபாய் 68.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68400.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்