சென்னையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று விலை உயர்ந்து காணப்பட்டது.இந்த வாரத்தில் 3 நாளில் விலை குறைந்துள்ளது. முதல் நாளில் குறைந்தும், இரண்டாம் நாளில் ஏறியும் தங்கம் விற்பனையானது.
இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று தங்கம் விலை குறைந்தும், வெள்ளி விலை அதிகரித்தும் விற்பனையாகிறது. இந்த நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,735 ஆக ரூபாயாக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,720 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்து 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.69.00 ஆக இருந்தது. இன்று அது ரூ.68.70 ஆக 30 பைசா குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.