- Advertisement -
ராஜஸ்தான் மாநிலம் பாரன் சாதர் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கு பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது சொந்தகார பையான உள்ள 20 வயது இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒன்றாக சுற்றுவது வெளியில் ஒன்றாக போவது என இருந்துள்ளனர். முதலில் குடும்பத்தினர் சொந்தகார பையன்தானே என இருந்துள்ளனர். ஆனால் இவர்களுக்குள் பழக்கம் காதலாக இருந்துள்ளது.
இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் வீட்டாருக்கு எப்படியோ தெரியவந்துள்ளது. இரு வீட்டாரும் இந்த திருமணத்திற்கு பெரும் எதிர்ப்புதெரிவித்தனர். இருவரும் ஒரே ஜாதி, ஒரே மதம், ஏன் இரு குடும்பமும் சொந்தக்கார குடும்பம் தான்.
ஆனால் இந்த திருமணத்திற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவிக்காததற்கான முக்கியமான காரணம் இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை முறையில் உள்ளவர். ஆம் 12ம் வகுப்பு படிக்கும் தங்கை தன் அண்ணன் முறையில் உள்ள பையனையே காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருவரும் வீட்டில் அழுது புலம்பிக்கொண்டிருந்துள்ளனர். சில நாட்களில் இது சரியாகிவிடும் என இரு வீட்டாரும் அசால்டாக இருந்துள்ளனர்.
திடீரென ஒரு நாள் இரவு இருவரையும் வீட்டில் காணவில்லை. இரவெல்லாம் தேடியும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை அவர்கள் வீட்டில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இரண்டு பிணம் தூங்கில் தொங்குவதாக தகவல் வந்தது.
உறவினர்கள் எல்லாம் பதறியடித்து அங்கு சென்று பார்த்த போது அண்ணன் தங்கை இருவரும் தூங்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.