- Advertisement -
ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கோரி நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (03) பேரணியூடான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலைகளின் பெற்றோர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் நடைபெற்றது.
நுவரெலியாவில் உள்ள நல்லாயன் மகளிர் கல்லுரி, மற்றும் புனித சவரியார் பாடசாலை ஆகியவற்றின் பெற்றோர்களே இவ்வாறு பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தை நடத்தினர். (க.கிஷாந்தன்)
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.