- Advertisement -
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு காரில் கஞ்சா கடத்தி சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
A9 வீதியில் மாங்குளம் பகுதியில் கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 6 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.