- Advertisement -
தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(01) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை நிறுத்திவிட்டு குறித்த நபர் வெளியில் சென்ற நிலையிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்படி நபர் தெரிவித்துள்ளார்.
வெடிப்பை அடுத்து கேஸ் அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (க.கிஷாந்தன்)
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.