- Advertisement -
பதுளை- ஹாலிஎல- ரஜமாவத்தையில் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை கண்காணிக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறித்த பாலத்தில் தவறி விழுந்துள்ளார்.
113 அடி நீளமான குறித்த பாலம் பயணிக்க முடியாதளவு பழுதடைந்து உள்ளதால், இதனூடாகப் பயணிக்கும் ஹாலிஎல மற்றும் ஊவாபரணம விவசாயிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
குறித்த பாலத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று இடம்பெற்ற போது, அதனை கண்காணிப்பதற்காக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது, பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கமைய, பாலத்தில் நடந்த டிலான் எம்.பி, இவ்வாறு தவறி விழுந்துள்ளார். அப்போது அருகிலிருந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சாமிக புத்ததாச உள்ளிட்டவர்கள் டிலானை காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில்,கீழே விழுந்து இந்த பாலத்தின் நிலைமையை தான் நன்றாக புரிந்துக்கொண்டதால், விரைவில் இதனை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.