- Advertisement -
ஹட்டன் – சமகி மாவத்தை பகுதியில் இரண்டு சிறுவர்களை மரத்தில் கட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டில், அவர்களின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
6 வயதான மகன் மற்றும் 7 வயதான மகள் ஆகியோரை, தந்தை மரமொன்றில் கட்டி வைத்து, தாக்கியுள்ளார்.
அத்துடன், அவர்களின் கண்களில் மிளகாய் தூள் பூசி அவர்களை கொடுமைப்படுத்திய காணொளி வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்தே, தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையிலேயே குறித்த நபர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இரண்டு சிறார்களும் விறகு திருடியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, தாக்குதல் நடத்தியதாக சந்தேக நபரான தந்தை தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்காக சிறார்கள், சிகிச்சைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.