- Advertisement -
பதுளை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் காரணமாக 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் மரணித்துள்ளதுடன், 180 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பதுளை மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, பாடசாலைகளையும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் பொது இடங்களையும் சுத்தம் செய்ய, பதுளை மாவட்ட செயலகத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமையின் பின்னர், பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து இடங்களும் சுகாதார பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், இதன்போது, டெங்கு நோய் பரவக்கூடிய வகையில் சுற்றுசூழல் காணப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று (14) காலை 10.00 மணிக்கு பசறை வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு, டெங்கு நோய் சம்பந்தமான தெளிவூட்டல்கள், பசறை கெமுனு மகா வித்தியாலயத்தில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.